Published : 18,Jun 2021 06:28 PM
‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைதான சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் கைது

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைதாகி உள்ள சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் விவகாரங்களில் சிவசங்கர் பாபாவுக்கு உதவியாக இருந்ததாக அவர் மீது புகார் வந்ததை அடுத்து போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளியில் பயிலும் மாணவிகளை மூளை சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்து செல்லும் பணியை சுஷ்மிதா செய்து வந்துள்ளதாக தெரிகிறது. அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியைகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.