Published : 18,Jun 2021 07:32 PM

நார்தன் இயக்கத்தில் கப்பற்படை அதிகாரியாக நடிக்கும் ‘கேஜிஎஃப்’ யாஷ்?

KGF-Actor-yash-to-play-a-navy-officer-in-director-narthan---s-next-movie-

இயக்குநர் நார்தன் இயக்கத்தில் ‘கேஜிஎஃப்’ நடிகர் யாஷ் கப்பற்படை அதிகாரியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா முழுக்க பிரம்மாண்ட வெற்றிபெற்ற ’கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘கேஜிஎஃப் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் யாஷ். இதன், டீசர் வெளியாகி சாதனைகளையும் வரவேற்பையும் பெற்றுள்ள நிலையில், யாஷ் அடுத்தது என்ன படத்தில் நடிக்கிறார் என்று பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலின் உதவி இயக்குநராகவும், கடந்த 2017 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த ‘மஃப்டி’ படத்தின் இயக்குநருமான நார்தன் இயக்கத்தில் யாஷ் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படத்தில், நார்தன் ஆக்ரோஷமான கப்பற்படை அதிகாரியாக நடிக்கிறார் என்றும் ’கேஜிஎஃப் 2’ வெளியானவுடன் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

image

இயக்குநர் நார்தன் பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவர். இவரின், ‘மஃப்டி’ சூப்பர் ஹிட் அடித்ததால், தமிழில் சிம்பு நடிப்பில் ‘பத்து தல’ படமாக ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை முதலில் தமிழில் இயக்கவிருந்தது நார்தன்தான். ஆனால், அவர் மாற்றப்பட்டு ‘சில்லுனு ஒரு காதல்’ பட இயக்குநர் கிருஷ்ணாவை ஒப்பந்தம் செய்தது தயாரிப்பு நிறுவனம்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்