கூட்டுறவு சங்க பெண் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சங்கத் தலைவர்...

கூட்டுறவு சங்க பெண் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சங்கத் தலைவர்...
கூட்டுறவு சங்க பெண் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சங்கத் தலைவர்...

கூட்டுறவு சங்க தலைவர் கூட்டுறவு சங்க பெண் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக இருந்து வருபவர் மோகன்தாஸ். இவர் கடந்த 8 ஆண்டுகளாக இந்த சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். மேலும் இவர், அதிமுகவின் முன்னாள் வாள்வச்சகோஷ்டம் பேரூர் செயலாளராக பதவி வகித்துள்ளார். பள்ளியாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 34 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் கேஸியா.

இந்நிலையில், சங்கத் தலைவரான மோகன்தாஸ் பதவி ஏற்றது முதல் தற்போது வரையிலும் கேஸியாவை பணி செய்ய விடாமல் துன்புறுத்தி வருவதோடு சங்க விதிகளுக்கு புறம்பான செயல்களை செய்வதற்கு வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு உள்ளே வந்த மோகன்தாஸ் சங்கச் செயலாளர் கேஸியாவை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையாக பேசியதோடு மட்டுமல்லாமல் என்னிடம் மோதினால் உன்னை தீர்த்துக்கட்டி விடுவேன் என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்து அலுவலகத்தில் உள்ள பொருட்களை தூக்கி எறிந்துள்ளார்.

இவை அனைத்தையும் அங்குள்ள பணியாளர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து கூட்டுறவு சங்க செயலாளர் கேஸியாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது கடந்த 8 ஆண்டுகளாக மோகன்தாஸால் தான் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளதாகவும் பணி செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும் தற்போது இதுகுறித்து, தான் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை மோகன்தாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com