[X] Close

அமெரிக்க தொழில்நுட்ப பல்கலைகழக தலைவராகும் தமிழர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலகம்

TN-Chief-Minister-MK-Stalin-congratulates-Chennai-born-man-Rajagopal-Ragavan-Echambadi-who-was-named-president-of-Illinois-Institute-of-Technology

அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ராஜகோபாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Advertisement

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 10ஆவது தலைவராக தமிழரான ராஜகோபால் ஈச்சம்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 131 வருடங்கள் பழமையானதும் உலகப் புகழ்பெற்றதுமான இல்லினாய்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை ராஜகோபால் ஈச்சம்பாடி பெறுகிறார். சென்னையில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்த ராஜகோபால், அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றுள்ளார். ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி முடித்த ராஜகோபால் கல்வித்துறையில் அளப்பரிய சாதனைகளை படைத்துள்ளார். வரும் ஆகஸ்டு மாதம் 16ஆம் தேதி இல்லினாய்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழக தலைவராக பொறுப்பேற்க உள்ள ராஜகோபால், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐஐடியுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்காவில் 131 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் ராஜகோபால் ஈச்சம்பாடி என்பதால், தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெருமை என குறிப்பிட்டுள்ளார். திருவாரூரில் பிறந்து சென்னையில் பள்ளி கல்லூரி படிப்பை முடித்த ராஜகோபால் ஈச்சம்பாடி, தமிழர்களின் தொழில்நுட்ப அறிவின் உலகளாவிய உயரத்திற்கு சான்றாக விளங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close