Published : 18,Jun 2021 01:02 PM

இந்தியாவின் துருப்புச் சீட்டு ‘அஸ்வின்’தான்: நியூசிலாந்துக்கு பயம் காட்டும் ரெக்கார்டு

Ashwin-Brilliant-Record-against-NZ-is-a-trump-card

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு பயம் காட்டும் துருப்புச் சீட்டாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணிக்கு எதிராக அவர் செய்திருக்கும் 'சம்பவங்கள்' அதற்கு ஆதாரமாக விளங்குகின்றன.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று சவுத்தாம்டன் நகரில் இருக்கும் ஏஜியஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. மிகவும் எதிர்பார்ப்புடன் தொடங்க இருக்கும் இந்தப் போட்டியில் மழை குறுக்கீடும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் விளையாட இருக்கும் 11 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. "கிரீன் பிட்ச்" இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்தியா 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. ஆம் அஸ்வின், ஜடேஜா என இருவரும் களம் காண்கிறார்கள்.

image

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் சூழலில் ஏன் 2 சுழற்பந்துவீச்சாளர்கள் என கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் அதற்கு பதிலளிக்கும் விதமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் அஸ்வினின் சாதனைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அந்நாட்டுக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 48 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதில் 6 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். மிக முக்கியமாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனை 5 முறை அவுட்டாக்கியிருக்கிறார். மேலும் அனுபவம் வாய்ந்த ராஸ் டெய்லரையும் 5 முறை அவுட்டாக்கியிருக்கிறார் அஸ்வின்.

image

அஸ்வின் இதற்குமுன் கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறார். இதனால் இங்கிலாந்து சீதோஷன நிலை அறிந்து, வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானங்களில் எப்படிப் பந்துவீச வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். இவர் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராகப் பந்துவீசுவதில் கில்லாடி. டெஸ்டில் இதுவரை வீழ்த்தியுள்ள 409 விக்கெட்களில், 207 விக்கெட்கள் இடது கை பேட்ஸ்மேன்களுடையதுதான். இதில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் டேவன் கான்வே ஆகியோர் இடக்கை பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்