
ரேஷன் கடைகளில் வரும் 2018-ம் ஆண்டு வரை மட்டுமே மானிய விலையில் அரிசி கோதுமை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறி உள்ளார்.
மக்களவையில் இது குறித்து கூறிய அவர், நாடு முழுவதும் 81 கோடி மக்களுக்கு முறையே கிலோ ரூ. 2 மற்றும் ரூ.3 என வழங்கப்பட்ட மானிய, அரிசி விலைகள் 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு பரிசீலனை செய்யப்படமாட்டாது என்றார். மேலும் உணவு பாதுகாப்பு சட்டப்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தானியங்களின் விலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இருப்பினும் 2018 வரை தற்போதைய திட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம்," எனவும் அவர் கேள்வி நேரத்தின்போது கூறினார்.