[X] Close

பாஜகவின் சிவப்புக் கம்பள வரவேற்பு... ஸ்டாலினிடம் எடுபடுமா மோடியின் 'ஆபரேஷன் மஸ்கா'?

சிறப்புக் களம்,தமிழ்நாடு

Operation-Maska-by-PM-Modi-to-roll-out-red-carpet-for-Stalin

திமுக தலைவரான மு.க.ஸ்டாலின், மே 7 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வராக அரியணை ஏறிய பிறகு முதல்முறையாக இன்று தேசிய தலைநகர் டெல்லிக்கு பயணம் செய்துள்ளார். இந்தப் பயணத்துக்கு மத்தியில் இன்றும் நாளையும், அதாவது ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், பிரதமர் மோடி 'ஆபரேஷன் மஸ்கா' திட்டத்தை என்பதை செயல்படுத்த இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உருது மற்றும் இந்தி மொழிகளில் 'மஸ்கா' என்ற சொல் வெண்ணெயைக் குறிக்கிறது. இந்த ஆபரேஷன் மஸ்கா குறித்து சற்றே விரிவாக பார்ப்போம்.


Advertisement

பாஜகவும் திமுகவும் கடந்த சில ஆண்டுகளாகவே கருத்தியல் ரீதியாக எதிரிகளாக இருந்து வருகின்றனர். இந்தநிலையில்தான் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக பாஜகவுக்கு நட்பாக செயல்படும் என்ற நம்பிக்கையில் இன்றைய பயணத்தில் மோடி, ஸ்டாலினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க முயற்சிக்கலாம். தற்போது இருக்கும் அரசியல் யதார்த்தங்களில் பாஜக - திமுக நட்பு கைகூடாத ஒன்றாக இருப்பதாக தோன்றினாலும், திமுகவுடன் நெருங்க பாஜக தனது முயற்சியை கைவிடாது எனக் கூறப்படுகிறது. இதனொரு திட்டமே 'ஆபரேஷன் மஸ்கா'. இந்தத் திட்டத்தின் முதல் காய் நகர்த்தல், இன்றைய பயணத்தின்போது ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக உணரவைப்பதோடு, திமுக தேசிய அளவில் ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதும் ஆகும்.

பாஜக தலைமையிலான மத்திய அரசில் அமைச்சர்கள் போன்ற பதவிகளை வழங்குவதன் மூலம் பல்வேறு கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. ஆளுநர் பதவி அல்லது கட்சித் தலைவர்களின் உறவினர்களுக்கான முக்கியப் பணிகள் போன்ற விருப்பங்களும் இதில் அடக்கம். இந்த 'அஜெண்டா'வால் திமுக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு, பாஜகவின் உயர்மட்டத்தினரால் கவரப்படுகிறார். ஆனால், இதுபோன்ற விஷயங்களைத் தாண்டி, பாஜகவுக்கு நம்பிக்கையைத் தருவது என்னவென்றால், 1999 மக்களவைத் தேர்தலுக்காக திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான். அப்போது கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் ஆகியோர் பிரதமராக வாஜ்பாய் பதவி வகிக்க முக்கிய பங்கு வகித்தனர்.


Advertisement

தமிழ்நாட்டில் 2001 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த இரு கட்சிகள் கூட்டாளிகளாக இருந்தபோது அவர்களின் உறவு மேலும் உறுதியாக மாறியது. ஆனால், அந்தத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், திமுக, பாஜக சார்பு பதவியில் இருந்து பின்வாங்கி 2004 மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு திரும்பியது. 1999-ஆம் ஆண்டில், பா.ஜ.க உடன் திமுக இரண்டு காரணங்களுக்காக இணைந்தது. ஒன்று, அதிமுக மத்திய அரசின் பங்காளியாக மாற இருந்ததை தடுத்தது. மற்றொன்று பாஜக மத்திய அமைச்சர் பதவியை முரசொலி மாறனுக்கு வழங்கியது.

மத்திய அமைச்சரவையில் தனது மருமகனுக்கு இடமளிக்கும் பொருட்டு, பாஜகவுடன் கருணாநிதி தேர்தல் கூட்டணி ஏற்படுத்த அதுவே அக்கட்சிக்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் ஜெயலலிதா மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2001இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக கருணாநிதி நல்ல பாடம் (தேர்தல் தோல்வி) கற்றுக்கொண்டார். இப்படியான நிலையில்தான் மீண்டும் திமுகவை நெருங்கிறது பாஜக. ஆனால், திமுகவை சிக்க வைப்பதற்காக மோடி விளையாடும் விளையாட்டைப் பற்றி ஸ்டாலின் நல்ல அறிந்து வைத்துள்ளார். 2001இல் ஏற்பட்ட தோல்வி குறித்து நியாபகம் இன்னும் அவருக்கு இருக்கும்.

பாஜகவுடன் நெருங்கிப் பழகுவது என்பது காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் போன்ற மதச்சார்பற்ற கட்சிகளைத் தடுத்து நிறுத்துவதாகும், அவர்களுடன் கூட்டணி தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் அதிமுகவுக்கு எதிராக மும்மடங்கு வெற்றியை வழங்கியுள்ளது. மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவால் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்த சிறுபான்மை வாக்குகள் அதிமுகவை விட ஆறு சதவீத வாக்குகளை அதிகமாக வாங்க வைத்ததோடு திமுக ஆட்சியை கைப்பற்ற உதவியிருக்கிறது. 2021 தேர்தல்களில் தமிழ்நாட்டின் கிட்டத்தட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், திமுக தலைமையிலான கூட்டணி 10,000 ஓட்டுகளை சிறுபான்மை வாக்கு வங்கியிலிருந்து பெற்றுள்ளது எனக் கணிக்கப்படுகிறது.


Advertisement

அதிமுகவால் இந்த அளவு வாக்குகளை சிறுபான்மை மக்களிடம் இருந்து வாங்க முடியவில்லை. எனவேதான் மீண்டும் அதே அரசியல் முட்டாள்தனத்தைச் செய்தால், அதிமுகவின் தலைவிதியும் திமுகவிற்கு ஏற்படும் என்பதை திமுக நன்றாக உணர்ந்து வைத்துள்ளது. அதேநேரம், பாஜகவுடனான ஓர் அரசியல் உறவை ஸ்டாலின் வெறுக்கிறார். குறிப்பாக பாஜகவின் கொள்கைகளை மாநிலத்தைப் பற்றிய பல்வேறு பிரச்னைகள் குறித்து மக்களின் நலன்களுக்கு விரோதமானது என்று மக்கள் மத்தியில் நிலைநிறுத்தியதே திமுகதான். ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் பெரும்பாலும் பாஜகவை 'டார்கெட்' செய்தே இருந்தது. அதிமுகவுக்கு எதிராக அவர் வைத்த முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், அது பாஜகவுக்கு அடிபணிந்தது, மாநில நலன்களை தியாகம் செய்தது என்பதுதான்.

திமுக தலைமையிலான முன்னணி ஏற்கெனவே மாநிலத்தின் 39 மக்களவை இடங்களில் 38 இடங்களைப் பிடித்திருந்தது. பா.ஜ.க.வின் கொள்கைகளின் பிரதான எதிரியாகவும், மாநில நலன்களின் வெற்றியாளராகவும் தி.மு.க தன்னை நிலைநிறுத்திக் கொண்ட விதம் அக்கட்சிக்கு நன்மையே பயத்துள்ளன. இதுபோன்ற காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் "விரைவான வளர்ச்சியை" உறுதி செய்வதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கூட்டணி வைக்க வேண்டியதன் அவசியத்தையும், மத்திய அமைச்சர் பதவிகளை வகிப்பதன் மூலம் திமுக பயனடையக்கூடும் என்பதையும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கூட்டணி வைக்க வேண்டியதன் அவசியத்தையும் பா.ஜ.க.வின் உயர் தலைமை இந்தச் சந்திப்பில் விளக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் 2024 தேர்தலில் உ.பி., பீகார் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பல முக்கியமான மாநிலங்களில் அதன் வெற்றி எண்ணிக்கை குறையக்கூடும் என்பதை பாஜக அறிந்திருக்கிறது. எனவே, இழப்பை ஈடுசெய்ய தெற்கில் அதன் எண்ணிக்கையை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த யோசனையே, ஸ்டாலின் வருகைக்கு நிறைய முக்கியத்துவத்தை அளிக்க வைக்கிறது. பாஜக திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் ஸ்டாலினுடனும் திமுக அரசாங்கத்துடனும் உறவை வலுப்படுத்துவதோடு, மாநில அமைச்சர்களை மத்திய அமைச்சர்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டு அவர்களை மென்மையான போக்கில் கையாள்வதும் முதல்கட்ட வேலையாக அசைன் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக, திமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வைப்பது. இது கடினமான செயல். எனினும் இது கைகூடவில்லை என்றால் 'பிளான் B' செயல்படுத்த பாஜக ஆயுத்தமாக இருக்கிறது என்கிறார்கள் மத்திய அரசுடன் நெருக்கமானவர்கள்.

- ஆர்.ரங்கராஜ்

உறுதுணைக் கட்டுரை: The Federal


Advertisement

Advertisement
[X] Close