[X] Close

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள வேண்டி தொடர்ந்து 3 மணிநேரம் வீணை மீட்ட சிறுமி

தமிழ்நாடு

The-girl-harp-for-3-hours-following-the-peoples-request-to-recover-from-the-corona-damage

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள வேண்டும் என்று சிறுமி பிரார்த்தனை செய்து கீர்த்தனைகள் உள்பட 25 தெய்வீக பாடல்களை இடைவிடாமல் வீணையில் இசைத்தார்.


Advertisement

11 வயதில் இசைக்கு ஏற்ப முகபாவம் செய்து வீணை இசைக்கும் இந்த சிறுமி சேலம் செங்கல்பட்டியை சேர்ந்த சைந்தவி கருணாகரன். கடந்த 5 ஆண்டுகளாக வீணை இசைப்பயிற்சி மேற்கொண்டு வரும் இந்த சிறுமி, கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தை வீணாக்காமல் தான் கற்ற இசையால் சாதனை புரிய முயற்சிகளை மேற்கொண்டார்.

image


Advertisement

இதன்படி தியாகராஜர் கீர்த்தனைகள் உள்பட 25 தெய்வீகப் பாடல்களை தொடர்ந்து மூன்று மணிநேரம் இடைவிடாமல் வீணையில் இசைத்தார். கொரோனா பிடியிலிருந்து உலக மக்கள் மீள வேண்டும் என்ற பிரார்த்தனையோடு இந்த சாதனை முயற்சியை மேற்கொண்ட சிறுமி சைந்தவி மற்ற குழந்தைகளும் ஊரடங்கு நேரத்தை வீண்டிக்காமல் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Advertisement

Advertisement
[X] Close