டிரெண்டிங்
தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - தி.வி.க. ஆதரவு
தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - தி.வி.க. ஆதரவு
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மதுரையில் போராட்டம் நடத்திவரும் வழக்கறிஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மதுரையில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பங்கேற்க திண்டுக்கல் வழியாக மதுரை சென்ற கொளத்தூர் மணியை பல்லப்பட்டி பிரிவில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்நிலையில் தங்கள் போராட்டத்தை கைவிட முடியாது என்று தெரிவித்துள்ள வழக்கறிஞர்கள், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்தனர்.