கண் தசைகளின் அசைவுகளை எலெக்ட்ரானிக் கட்டளைகளாக மாற்றும் புதிய கண்ணாடிகளை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
சீனாவின் சாங்கிங் பல்கலைக்கழகம் (Chongqing University ) மற்றும் சீன தேசிய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஆகியவை இணைந்து இந்த புதிய கண்ணாடிகளை வடிவமைத்துள்ளன. கண் அசைவுகளை எலெக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றும் ட்ரைபோஎலெக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர் (TENG) என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சென்சார்கள் கண் கண்ணாடிகளின் பிரேமில் இணைக்கப்பட்டு, கண் தசைகளின் அசைவுகளை முழுமையாகக் கண்காணிக்கும். அசைவுகளைக் கட்டளைகளாக மாற்றி கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட சிறிய அளவிலான எலெக்ட்ரானிக் கருவிக்கு கடத்தும்.
இதன்மூலம் கண் அசைவின் கட்டளைகளை ஏற்று கம்ப்யூட்டர்கள் ஆன் செய்வதோ, ஆஃப் செய்வதையோ நிகழ்த்தலாம் என்று விஞ்ஞானிகள் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். அது மட்டுமல்ல கம்ப்யூட்டரில் டைப் செய்ய கீ போர்டே தேவை இல்லை. கண் அசைவிலேயே டைப் செய்யவும் இந்தக் கண்ணாடி உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். நாம் டைப் செய்ய வேண்டிய எழுத்தை அந்த கண்ணாடியை அணிந்து கொண்டு சிறிது நேரம் பார்த்தால் போதும் எழுத்து செலக்ட் ஆகி விடும். அப்படியே வரிசையாக எழுத்துக்களைத் தேர்வு செய்து மொத்தமாக வார்த்தைகளை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், கண் அசைவில் விளக்குகளை அணைப்பது, ஆன் செய்வது உள்ளிட்டவைகளையும் செய்து காட்டி அசத்தியுள்ளனர் சீன விஞ்ஞானிகள்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி