விவேகத்திற்கும் மங்காத்தாவிற்கும் செம மேட்சிங்

விவேகத்திற்கும் மங்காத்தாவிற்கும் செம மேட்சிங்
விவேகத்திற்கும் மங்காத்தாவிற்கும் செம மேட்சிங்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விவேகம். ஆகஸ்ட் 10-ஆம் தேதி படம் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காரணம் எதுவும் சொல்லாமல் படத்தின் ரீலிஸ் தேதி ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் அஜித்தின் மங்காத்தா படத்திற்கும் விவேகம் படத்திற்கும் ஒரு ஒற்றுமையை உண்டாக்கியுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் மங்காத்தா. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததுடன் வசூலிலும் சாதனை படைத்தது. படம் வெளியான அடுத்த நாளான செப்டம்பர் 1-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியான படம் அஜித்திற்கு நல்ல ஏற்றத்தையே கொடுத்திருந்தது.

தற்போது விவேகம் படத்தின் ரீலிஸ் தேதி ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஒற்றுமை என்னவென்றால், இந்தாண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் வெளியான மங்காத்தா படம் வெற்றியை குவித்தது போல் விவேகம் படமும் வெற்றியை குவிக்கும் என்கிற நம்பிக்கையில் படத்தின் ரீலிஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com