நீட் சிக்கல்களை களைவது குறித்து ஆலோசனை: அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் சிக்கல்களை களைவது குறித்து ஆலோசனை: அமைச்சர் விஜயபாஸ்கர்
நீட் சிக்கல்களை களைவது குறித்து ஆலோசனை: அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கு தடையாக உள்ள சட்டச் சிக்கல்களை களைவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் ஆணை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நீட் விவகாரத்திற்கு தீர்வு காண்பது பற்றி மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டாவை ஒரே நாளில் 3 முறை சந்தித்து பேசியதாக குறிப்பிட்ட விஜயபாஸ்கர், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் இது குறித்து பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com