Published : 01,Aug 2017 10:45 AM

மகனை பார்த்து குரைத்ததால் நாயை அடித்துக் கொன்ற தந்தை

Dog-Barking-her-son-and-his-father-killed-the-dog

மகனை பார்த்து குரைத்ததால் நாய் ஒன்றை தந்தை அடித்துக்கொன்ற சம்பவம் சென்னையில் ‌நடந்துள்ளது. நாயை அடித்துக்கொன்ற காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும், எதிர்வீட்டில் உள்ள ஆறுமுகத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், மணிகண்டனின் நாயான பப்பி ஆறுமுகத்தின் மகன்களை பார்த்து குரைத்ததால் இரு குடும்பத்திற்கும் இடையிலான சண்டை மேலும் தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், மணிகண்டனின் நாயை அடித்து கொன்றுள்ளார். தனது நாய் அடித்து கொல்லப்பட்டது குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ‌‌மணிகண்டன் புகார் அளித்தார்.

இதற்கிடையே ஆறுமுகம், நாயை அடித்து கொல்லும் காட்சிகள் அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கின்றன. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இரு குடும்பங்களுக்கு இடையிலான சண்டையில் நாய் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்