Published : 14,Jun 2021 09:57 PM
“என்னை யாராலும் தடுக்க முடியாது” : சசிகலா பேசிய 41ஆவது ஆடியோ வெளியானது
கட்சியை மீண்டும் நல்ல வழியில் கொண்டு வருவோம், அதை யாராலும் தடுக்க முடியாது என சசிகலா பேசிய 41ஆவது ஆடியோ வெளியாகியுள்ளது. சசிகலா உடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையிலும், அடுத்த ஆடியோ வெளியாகி இருக்கிறது.
மேலும் சசிகலா அந்த வீடியோவில், “இதைப்போன்ற சூழலை ஏற்கனவே ஜெயலலிதாவுடன் இருந்த போது பார்த்துள்ளேன். இவர்கள் செய்வது எல்லாம் எனக்கு புதிதாக தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.