வரும் வெள்ளிக்கிழமை அன்று உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. சவுத்தாம்ப்டனில் உள்ள ஏஜிஎஸ் பவுலில் நடைபெறும் இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு கிடைக்கும் பரிசுத் எவ்வளவு என்பதை பார்ப்போம்.
இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 11.71 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும். அதே போல இரண்டாம் இடம் (ரன்னர் அப்) பிடிக்கும் அணிக்கு 5.8 கோடி ரூபாய் கிடைக்கும். மேலும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா (3.3 கோடி ரூபாய்), இங்கிலாந்து (2.5 கோடி ரூபாய்), பாகிஸ்தான் (1.5 கோடி ரூபாய்) மற்றும் பிற அணிகளுக்கு (தலா 73 லட்ச ரூபாய்) கிடைக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இரு அணிகளும் சாம்பியன்ஷிப் பட்டத்தை பகிர்ந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டால் தலா 8.78 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாம்.
இந்தியா கடந்த 3ஆம் தேதி இங்கிலாந்து சென்றது. நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்ற நிலையில் இந்த இறுதி போட்டியில் விளையாட உள்ளது.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!