இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா இரண்டாவது அலைக்கு மிக முக்கியமான காரணம், டெல்டா வகை கொரோனா திரிபு. இந்தியாவில் பரவத்தொடங்கிய இந்த திரிபு, பி.1.617.2 என்று அழைக்கப்பட்டது. முன்னராக இருந்த பி.1.617 என்பதிலிருந்து பிரிந்து, இது உருவானது. இந்நிலையில், இதிலும் இப்போது பிரிவு ஏற்பட்டுள்ளது. அதை, பி.1.617.2.1 என்று சொல்கிறார்கள் அறிவியலாளர்கள். இது, டெல்டா ப்ளஸ் திரிபு என அழைக்கப்படுகிறது.
இந்த டெல்டா ப்ளஸ் திரிபு, தற்போதிருக்கும் கொரோனா மருந்துகளுக்கு கட்டுப்படாமல் போகலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள். ஜூன் 7ம் தேதி வரையில், இந்தியாவில் ஆறு பேருக்கு டெல்டா ப்ளஸ் வகை கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த வினோத் ஸ்கேரியா என்ற உயிரியல் துறை மருத்துவர் பேசும்போது, “இந்த வகை திரிபு, கேசிரிவிமாப் (Casirvimab) மற்றும் இம்டெவிமாப் (Imdevimab) ஆகிய மருந்துகளுக்கு கட்டுப்படுகிறது. ஆகவே அவற்றை அவசரகால பயன்பாட்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய மருந்து கட்டுப்பாடு வாரியம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இப்போதைக்கு இது இந்தியாவில் அதிகளவு பதிவாகவில்லை. இருந்தாலும், அதுபற்றி நாம் அதிகம் ஆராய வேண்டும்” எனக்கூறியுள்ளார். இந்த புது வகை திரிபு, ஐரோப்பா – ஆசியா – அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவலாக தெரிகிறது.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!