Published : 01,Aug 2017 09:07 AM

ரேஷன் பொருள் வாங்க கட்டுப்பாடுகள்: வாபஸ் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்

Ration-Item-Restrictions--Stalin-s-assertion-to-withdraw

ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் ரேஷன் பொருள் கட்டுப்பாடுகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேஷனில் பொருள் வாங்குவோரின் எண்ணிக்கையை குறைப்பதே அரசின் நோக்கம் என்பது அரசிதழ் அறிவிப்பிலிருந்து உறுதியாவதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு விதி கடைபிடிக்கப்படாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்திருப்பது இதை துக்ளக் தர்பார் ஆட்சி என்றே கருதத் தோன்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசின் முடிவால் ஏழை எளிய மக்கள் அரிசியை வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும், ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் அரசிதழ் அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்