[X] Close

விஐபி-2 ரிலீஸ்: வதந்தியை பரப்பாதீர்கள் - தனுஷ்

VIP-2-Release-date-Dhanush

விஐபி-2 படத்தின் ரிலீஸ் தேதி இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் வதந்திகளை பரப்பாதீர்கள் என்றும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள விஐபி-2 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் படம் 18 ஆம் தேதி வெளியிடப்படுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், விஐபி-2 படம் வெளியீட்டு தேதி குறித்து யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். இன்று இரவு 7 மணிக்கு டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். பொறுமையாக காத்திருந்ததற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

விஐபி-2 படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. முன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகுமா? எந்த தேதியில் வெளியாகும் என்று குழம்பியிருந்த ரசிகர்களுக்கு தனுஷின் இந்த அறிவிப்பு சற்று நிம்மதியையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.


Advertisement

இன்று இரவு 7 மணிக்கு சமூக வலைத்தளங்கள் தனுஷ் ரசிகர்கள் கையில்தான்.


Advertisement

Advertisement
[X] Close