[X] Close

கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்குமா? ஆய்வுகள் என்ன சொல்கிறது?

கொரோனா வைரஸ்,வீடியோ ஸ்டோரி

கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிக அளவில் தாக்கும் என்பது அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என புதிய ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.


Advertisement

லான்செட் கோவிட் 19 இந்திய டாஸ்க் போர்ஸ் கமிஷன் என்ற அமைப்பு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 10 வயதிற்கும் குறைவான கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மருத்துவ அறிக்கைகள், மாதிரிகளை ஆய்வு செய்தது. அதில் பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருப்பதையும், சில குழந்தைகளுக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுவலி போன்ற சில அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த குழந்தைகள் 2.4 சதவீதம் மட்டுமே என்பதும், அதில் 40 சதவீத குழந்தைகள் மனவளர்ச்சி குன்றிய மருத்துவ சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாத குழந்தைகள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close