[X] Close

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சினிமா,தமிழ்நாடு

Bomb-threat-to-Vijaykanth-s-house-this-year-too-

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.


Advertisement

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அடையாளம் தெரியாத நபர் போன் செய்து இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதனையடுத்து மோப்ப நாயுடன் நேரில் சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சுமார் அரை மணி நேரம் அவரது வீடு முழுவதும் சோதனை செய்ததில் சந்தேகப்படும்படியான பொருள் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. விருகம்பாக்கம் போலீஸ் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.


Advertisement

கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும், இதேபோல் விருகம்பாக்கம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்டிருந்தார். மோப்ப நாயுடன் சென்ற காவல்துறையினர் விஜயகாந்த் வீட்டில் சோதனையிட்டனர். அதுவும் புரளி என்று கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த அன்றைய தினமே நடிகர் தனுஷ் வீடு இருக்கும் அபிராமபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிடட்டல் விடப்பட்டு அதுவும் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close