Published : 01,Aug 2017 06:22 AM
‘பொதுவாக எம்மனசு தங்கம்’: உதயநிதி - பார்த்திபன் கலாட்டா கூட்டணி

உதயநிதி - பார்த்திபன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படம் வரும் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமுக இயக்குநர் பிரபு இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், சூரி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’. உதயநிதியுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்து நடிகர் பார்த்திபன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படம் வரும் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக தணிக்கை குழுவிற்கு இப்படம் அனுப்பப்பட்டு குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் படம் என்றாலே காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என சகல அம்சங்களும் இருப்பதுபோல் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திலும் காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை என்பது படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. இதையடுத்து படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.