[X] Close

மிரட்டல் புகார்: யூட்யூபர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேர் கைது 

தமிழ்நாடு

Police-have-arrested-4-people-including-youtube-duraimurugan

திருச்சியில் நான்கு சக்கர வாகன உதிரிபாக நிறுவனத்தில் நுழைந்து தகராறு செய்ததாக யூட்யூபர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


Advertisement

திருச்சி கே.கே.நகரில் நான்கு சக்கர வாகனங்கள் உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் நிலையம் வைத்திருப்பவர் வினோத். இவர் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து யூட்யூபர் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ், சரவணன் உள்ளிட்டோர் வினோத்தை மிரட்டி மன்னிப்பு கோர வைத்துள்ளனர். சர்ச்சைக்குரிய பதிவை வினோத் நீக்கியுள்ளார்.

இதனையடுத்து தாம் மிரட்டப்பட்டது குறித்து திருச்சி - கே.கே.நகர் காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார். அதன்பேரில் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நால்வரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close