தங்கும் அறையில் பேய்: அச்சத்தில் ஏர் இந்தியா ஊழியர்கள்

தங்கும் அறையில் பேய்: அச்சத்தில் ஏர் இந்தியா ஊழியர்கள்
தங்கும் அறையில் பேய்: அச்சத்தில் ஏர் இந்தியா ஊழியர்கள்

அமெரிக்காவில் உள்ள விடுதி ஒன்றில், ஏர் இந்தியாவின் ஊழியர்கள் தங்கும் அறையில் பேய் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு விடுதியில் ஏர் இந்தியா ஊழியர்கள் தங்கியுள்ளனர். இந்த விடுதியின் அறைகளில் விசித்திரமான ஒலிகளும், வாசனைகளும் வருவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒளிவிளக்‍குகள் அடிக்‍கடி மின்னுவதாகவும், கதவுகள், ஜன்னல்கள் தானாக திறந்து மூடுவதாகவும், இரவு நேரங்களில் இயல்பான தூக்‍கம் வருவதில்லை என்றும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஏர் இந்தியா ஊழியர்கள் அந்நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், சிகாகோ விடுதி நிர்வாகத்திடம் இதுகுறித்து முழுமையான தகவல்களை கேட்டுள்ளதாகவும், ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com