Published : 11,Jun 2021 05:35 PM

சசிகலா ஆடியோ விவகாரத்தை ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன - முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்

Sasikala-audio-affair-The-media-is-exaggerating-Former-Minister-Pandiyarajan

சசிகலா ஆடியோ விவகாரம் தேவையற்ற விவாதம், ஊடகங்கள் இதை பெரிது படுத்துகின்றன என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னையை அடுத்துள்ள ஆவடியில் முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது மாஃபா அறக்கட்டளை சார்பாக நலிவுற்ற கணவனை இழந்த பெண்கள் சுமார் 11 பேருக்கு ரூ. 2லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள், 350 நபர்களுக்கு மூக்கு கண்ணாடிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

image

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “தற்போதுள்ள அரசு நன்றாக செயல்படுகிறது. எனினும் தினசரி தொற்று முன்னிருந்த ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 6000 என்ற வீதத்தில் இருந்தது. ஆனால், தற்போது 16000-ஆக உள்ளது. இதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதுள்ள அரசிடம் ஒருங்கிணைப்பு இல்லை என தெரிகிறது. ஒருங்கிணைந்து செயல்பட்டு தொற்றின் அளவை குறைக்க வேண்டும் என்றவர், முந்தைய அரசு செயல்படுத்திய புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து பேசிய அவர், யூனியன் என்பதன் தமிழாக்கம்தான் ஒன்றியம் என்ற பொருள். மைய அரசு என்றாலும், ஒன்றிய அரசு என்றாலும் ஒன்றுதான். ஒன்றிய அரசு என அழைப்பதன் மூலம் மாநில அரசின் வலிமையை உயர்திக்காட்ட கூறப்படுகிறது. இதில் தவறு ஏதும் இல்லை. ஒன்றிய அரசு என்பதை ஒரு பிரிவினைவாத சொல்லாக பயன்படுத்தாமல் இருந்தால் சரியாக இருக்கும்” என்றார்

image

சசிகலா ஆடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாண்டியராஜன், “தற்போது இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மீண்டு எழுந்து வருகிறது. தொண்டர்கள் இந்த தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த ஆடியோ விவகாரம் தேவையற்ற விவாதமாக உள்ளது. இதை ஊடகங்கள்தான் பெரிய விவாதமாக மாற்றி வருகின்றனர். இதனால் கட்சிக்குள் எந்த குழப்பம் ஏற்படக்கூடாது” என்று பதில் அளித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்