
விஜய்சேதுபதியுடன் முதல்முறையாக த்ரிஷா இணைந்து நடிக்கும் ‘96’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
விக்ரம் வேதா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்சேதுபதி பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய்சேதுபதி த்ரிஷாவுடன் இணைந்து ‘96’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 90களில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரில் விஜய்சேதுபதி அருகே கேமரா இருப்பது போல் காட்சியளிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது படத்தில் விஜய்சேதுபதி போட்டோகிராஃபராக தோன்றுவார் என்று பேசப்படுகிறது.
படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி, இந்தப்படம் பள்ளிபருவத்தில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாகவும், அனைவரும் நம் வாழ்க்கையில் இப்படி ஒரு காதல் நடக்கவில்லையே என்று ஏங்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என்றும் படத்தின் பூஜையன்று கூறியிருந்தார்.