வருமானவரி தாக்கல்: 5 ஆம் தேதி வரை கால அவகாசம்

வருமானவரி தாக்கல்: 5 ஆம் தேதி வரை கால அவகாசம்

வருமானவரி தாக்கல்: 5 ஆம் தேதி வரை கால அவகாசம்

2016-17 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வருமானவரி கணக்கு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் என்பதால், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் 12 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு இயங்கின. இந்நிலையில் இணையதளம் வாயிலாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால் காலக்கெடுவை வரும் 5 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்பதால், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய காலதாமதம் ஆவதாகவும், எனவே கணக்கைத் தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com