தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.
தமிழ்நாட்டில் வரும்14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில், அதனை நீட்டிப்பது பற்றியும், கூடுதல் தளர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொற்று பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொற்று அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டாம் என கூட்டத்தில் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். அதே வேளையில் மற்ற மாவட்டங்களில் காலையில் நடைப்பயிற்சிக்கு அனுமதி அளிப்பது, அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது போன்ற தளர்வுகளை அளிக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
11ஆம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை ஜூன் மூன்றாவது வாரம் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கையின் போது என்ன மாதிரியான நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் அறிவிப்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பாடப்புத்தகம் விநியோகம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் அறிவிப்பில் இருக்கும். இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரபூர்வமாக வெளியாக உள்ளது
Loading More post
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்