[X] Close

“ஹலோ. தவிப்பு வேண்டாம். நானிருக்கிறேன்” - மருத்துவப் பணியாளராக வலம் வரும் மனித ரோபோ

டெக்னாலஜி,வீடியோ ஸ்டோரி

கொரோனாவால் பாதிக்கப்படுவது வேதனையெனில், தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பது இன்னும் ரணம். இப்படி தனிமைப்படுத்தால் தவிக்கும் முதியவர்களின் மனதை இலகுவாக்கிறது ஹாங்காங்கில் வடிவமைக்கப்பட்ட புதிய ரோபோ ஒன்று.


Advertisement

“ஹலோ. நான் தான் கிரேஸ். முதியவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். மக்களை சந்தித்துப் பேசி அவர்களுடைய நாளை பிரகாசமாக மாற்றுவேன். தனிமைப்படுத்தலா. தவிப்பு வேண்டாம். நானிருக்கிறேன்” என்கிறது மருத்துவப் பணியாளராக வலம் வரும் இந்த மனித ரோபோ. 

ஆங்கிலம், MANDARIN, CANTONESE என சில மொழிகளில் நலம் விசாரிக்கிறது இந்த ரோபோ. சென்சாரால் உடல்வெப்பத்தை சோதித்து அறிகிறது. இப்படி செவிலியர் போல் சேவை செய்யும் கிரேஸ் ரோபோவை வடிவமைத்திருகின்றனர் ஹாங்காங்கை சேர்ந்த டேவிட் ஹன்ஸன். மருத்துவப் பணியாளர்களுக்கு நிகரான அனைத்து பணிகளையும் செய்யும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.


Advertisement

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் முதியவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த எந்திரம் அன்பையும், அரவணைப்பையும் தருவது ஆச்சர்யமே. ஆறுதலாக பேசி, முதியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறது கிரேஸ்.

ஆசிய மற்றும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களின் முக அம்சத்துடன் வடிவைக்கப்பட்ட ரோபோவில், மார்பு பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது உடல் வெப்பத்தை கண்டறிகிறது. எதிரே உள்ளவர்கள் பேசுவதை புரிந்து கொண்டு அதற்கேற்றபடி பதிலளிக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோ. மனிதர்களைப் போல முகத்தில் சிரிப்பு, சோகம் என உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதால், கொரோனா நோயாளிகளின் மனதில் ஆறுதல் காற்று வீசுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரேஸ் நேரடியாகக் சென்று சேவையளிக்கும் நிலையில், மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோருக்கு நோய்பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாகிறது. இந்த ரோபோவை உருவாக்குவதற்கு ஒரு ஆடம்பரமான காரை தயாரிக்கும் அளவுக்கு செலவாவதாவும், எதிர்காலத்தில் அதிகளவிலான ரோபோக்களை தயார் செய்யும் போது, ரோபோவின் விலை குறையும் என இதன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா புதுப்புது பரிணாமம் எடுத்து வரும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் உலகமெங்கும் கிரேஸ் ரோபோவிற்கான தேவை ஏற்பட்டால் ஆச்சர்யமில்லை.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close