[X] Close

35 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 13 பேர் மட்டுமே உள்ளதாக புகார்

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனை, தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் போதிய மருத்துவர்கள் இல்லை என்று புகார் எழுந்துள்ளது.


Advertisement

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் இரு மாவட்டங்களுக்கும் மையப்பகுதியில் அமைந்துள்ள குளித்தலை அரசு மருத்துவமனையில், தினமும் புறநோயாளிகளாக 500க்கும் அதிகமானோர் வருகிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் விபத்தில் காயம் அடைந்தவர்களையும் அழைத்துவருவது வழக்கம். தீவிர அவசர சிகிச்சை பிரிவு, 24 மணி நேரம் சிகிச்சை, 100 படுக்கைகள் அடங்கிய கோவிட் சிறப்பு சிகிச்சை பிரிவு, தாய் சேய் அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும், உபகரணங்களும் இருக்கும் நிலையில் 35 மருத்துவர் இருக்கவேண்டிய இடத்தில் 13 பேர் மட்டுமே பணியில் உள்ளனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவிட் சிகிச்சைக்கு ஆறு மருத்துவர்கள் உள்ள நிலையில், 3 மருத்துவர்கள் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். தமிழக அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கரூர் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநரிடம் கேட்டபோது, கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டிருப்பதாகவும், விரைவில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close