[X] Close

விரைவுச் செய்திகள்: முதல்வர் - ஆளுநர் சந்திப்பு | பெட்ரோல் விலை உயர்வு | அதிபர் தாக்குதல்

இந்தியா,தமிழ்நாடு

Tamilnadu--India--World-news-till-11-AM

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி: தமிழகத்தில் ஊரடங்கு காரணமாகவே கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

கட்டுமானப் பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு மூட்டை சிமெண்ட் 370 ரூபாயில் இருந்து 520 ரூபாயாக அதிகரித்துள்ளது.


Advertisement

பெட்ரோல் விலை உயர்வு - போராட்டம் அறிவிப்பு: பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து வரும் 11ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சரின் உதவியாளரிடம் விசாரணை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியிடம் சென்னையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இணையத்தில் கோயில் நிலங்கள் விவரம் வெளியீடு: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் நில விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 3 லட்சத்து 43 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பற்றிய ஆவணங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.


Advertisement

பட்டாக் கத்தியுடன் ரகளை செய்த நபர்: சென்னையில் குடிபோதையில் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபரை கைதுசெய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. மின்னல் தாக்கி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை: மும்பையில் தென்மேற்கு பருவமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு தடுப்பூசி வழங்கி உதவுக: கொரோனாவால் நெருக்கடியை சந்தித்துள்ள இந்தியாவுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என உலக நாடுகளுக்கு யுனிசெஃப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

போலி சாதி சான்றிதழ்: எம்.பி.க்கு அபராதம்: போலி சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் நடிகையும், எம்பியுமான நவ்நீத் கவுருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எம்.பி பதவிக்கு சிக்கல் ஏற்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிபரின் கொள்கைகள் பிடிக்காததால் தாக்குதல்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை கன்னத்தில் அறைந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிபரின் கொள்கைகள் பிடிக்காததால் தாக்கியதாக விசாரணையில் அளித்த வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்குள் கடும் சண்டை: பொலிவியா நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழியில் படுத்து உறங்கிய யானைகள்: சீனாவில் குட்டிகளுடன் யானைக் கூட்டம் சாலைக்கு வந்தது. 500 கிலோ மீட்டர் தூரம் வழியில் படுத்துறங்கிய யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிரமாண்ட 'சோலார்' மின் நிலையம்: அட்டகாமா பாலைவனத்தில் பிரமாண்ட சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கரியமில வாயு பயன்பாட்டை குறைக்க சிலி அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close