[X] Close

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசாவின் திட்டத்திற்கு கைகொடுக்கும் தமிழ்ப்பெண் சுபாஷினி

வீடியோ ஸ்டோரி

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசாவின் கனவுத்திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சுபாஷினி முக்கியப் பங்காற்றி வருகிறார்.


Advertisement

வரும் 2024ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா முனைப்பு காட்டி வருகிறது. 

இந்த திட்டத்திற்கு ஆர்ட்டெமிஸ் என பெயரிடப்பட்டுள்ள நாசா, இதற்கான விண்கலத்தையும் உருவாக்கி இருக்கிறது. ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் படி வரும் நவம்பர் மாதம் ஆளில்லாத விண்கலத்தை நிலவுக்கு அனுப்புகின்றனர். ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் 2023 அல்லது 2024இல் வீரர்களை நிலவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தின் ராக்கெட் தயாரிப்பு திட்டப் பணிகளை கோவையை சேர்ந்த சுபாஷினி வழிநடத்தி வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு. 


Advertisement

எஸ்எல்எஸ் என்ற உலகின் சக்தி வாய்ந்த ராக்கெட்டை இத்திட்டத்திற்காக நாசா மற்றும் போயிங் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் போயிங் நிறுவன குழுவின் மேற்பார்வையாளராக 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் சுபாஷினி, 500 விநாடிகளில் 5.3 லட்சம் அடி தொலைவு பாயும் வகையில் ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

கோவையை சேர்ந்த சுபாஷினி,1992ஆம் ஆண்டு கோவையில் உள்ள கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து, மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். பின்னர் போயிங் நிறுவனத்தில் இணைந்த அவர், நாசாவின் திட்டத்திற்கான ராக்கெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close