கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இதுவரை தமிழ்நாட்டில் 900க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான அரசாணை வெளியாகி உள்ளது.
அதன்படி ரத்தத்தின் சர்க்கரை அளவை நீரிழிவு நோயாளிகளுக்கு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள், கொரோனா சிகிச்சை மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் உள்ள நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் இது பொருந்தும் குறிப்படப்பட்டுள்ளது.
>நீரிழிவு நோய் இல்லாத நோயாளிகளும் கூட ஸ்டெராய்ட் எடுப்பதால் ரத்தத்தில் இருக்க கூடிய சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும். அதனால் அவர்களது சர்க்கரை அளவையும் கண்காணிக்க வேண்டும்.
>இரவு உணவுக்கு முன்பாகவும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும்.
>சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு ஸ்டெராய்ட் உடன் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும்.
>மூன்று வேளை உணவுக்கு முன்னதாக நிச்சயம் இன்சுலின் செலுத்த வேண்டும்.
>சர்க்கரை அளவு 400க்கு கூடுதலாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 5 யூனிட் என்ற அளவில் இன்சுலின் செலுத்த வேண்டும்.
>கருப்பு பூஞ்சை நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஸ்டெராய்ட் எடுத்து கொள்பவர்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அதற்கான சிகிச்சையுடன் இன்சுலினை சேர்த்து அளிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்