முகக்கவசம், கிருமிநாசினி, பிபிஇ கிட் உள்ளிட்ட மருத்துவ பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மூன்று அடுக்கு சர்ஜிகல் மாஸ்க் 4 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், தரத்தை பொறுத்து அதிகபட்சமாக 4 ரூபாய் 50 பைசாவுக்கு விற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அடுக்கு சர்ஜிகல் மாஸ்க் 3 ரூபாய், என் 95 மாஸ்க் 22 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிருமிநாசினி 200 மில்லி, அதிகபட்சம் 110 ரூபாய் என தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. பிபிஇ கிட் எனப்படும் முழு கவச உடைக்கான அதிகபட்ச விலை 273 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் செலுத்த பயன்படுத்தப்படும் ஃப்ளோ மீட்டர் ஆயிரத்து 520 ரூபாய் என்றும், ஆக்சிஜன் அளவை கண்டறிய உதவும் பல்ஸ் ஆக்சிமீட்டர் ஆயிரத்து 500 ரூபாய் எனவும் அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. ஃபேஸ் ஷீல்டு எனப்படும் முகத்தடுப்பின் அதிகபட்ச விலை 21 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
முழு விலைப்பட்டியல்
மூன்று அடுக்கு சர்ஜிகல் மாஸ்க் - ரூ.4
மூன்று அடுக்கு சர்ஜிகல் மாஸ்க் - ரூ.4.50
இரண்டு அடுக்கு சர்ஜிகல் மாஸ்க் - ரூ.3
என் 95 மாஸ்க் - ரூ.22
கிருமிநாசினி 200 மில்லி - ரூ.110
பிபிஇ கிட் - ரூ.273
ஃப்ளோ மீட்டர் - ரூ.1,520
பல்ஸ் ஆக்சிமீட்டர் - ரூ.1,500
ஃபேஸ் ஷீல்டு - ரூ.21
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?