சிறுமி வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் பியர்ல் வி பூரிக்கு ஆதரவாக நடிகை யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “ பியர்ல் வி பூரி மிகவும் மென்மையான மனிதர். எனக்குத் தெரியும். அவர் ஒரு கனிவான மனிதர். உண்மைக்காக காத்திருப்போம். எனது நண்பர் திரும்பி வருவார். “ என்று குறிப்பிட்டுள்ளார்.
#PearlVPuri is definitely soft spoken guy. One of the kindest souls I know . Let’s wait for the truth . #ISTANDWITHPEARL ! Hope my friend is back . Let’s stay positive pic.twitter.com/lfTJiNG2f7
— Yashika Aannand (@iamyashikaanand) June 5, 2021Advertisement
முன்னதாக, பாலிவுட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமான நடிகர் பியர்ல் வி பூரி தமிழில் நாகினி தொடரில் நடித்ததன் மூலம்
பிரபலமானார். இவரை நேற்று தானேவின் வாலிவ் போலீசார், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து அவர் தற்போது 2 வார நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தப் புகார் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையால் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறும் போது, “ இந்த புகார் கடந்த 2019-ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளம் நிறுவப்படவில்லை. சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்த நாங்கள் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளோம். நீதிமன்ற காவலில் இருக்கும் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளது.
ஏற்கனவே தமிழில் ‘நாயகன்’, ‘சாமுராய்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான அனிதா ஹசானந்தனி, பியர்ல் வி பூரிக்கு ஆதரவாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ அவரை எனக்குத் தெரியும். இது உண்மை அல்ல... உண்மையாக இருக்க முடியாது.. அனைத்தும் பொய்.. இதில் நிறைய விஷயங்கள் இருக்கிறது.. உண்மை விரைவில் வெளிவரும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்