Published : 05,Jun 2021 10:05 PM

துளிர்க்கும் நம்பிக்கை: தினமும் 386 பேருக்கு மதிய உணவை வழங்கிவரும் அஸ்வின்ஸ் குழுமம்

மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கி வரும் பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமம், புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' முயற்சியில் கைகோர்த்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல், தினமும் 386 பேருக்கு மதிய உணவை அஸ்வின்ஸ் குழுமம் வழங்கி வருகிறது. மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் போன்றவர்களை தேடிச் சென்று உணவுகளை வழங்கி வருவதாகக் கூறியுள்ள, அஸ்வின்ஸ் உணவக உரிமையாளர் கே.ஆர்.வி.கணேசன், புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

யாரேனும் உதவி தேவைப்படுவோர் புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கையின் மூலம் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் உதவிசெய்ய காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

> புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் உதவிகள் கோரி வந்துகொண்டிருக்கின்றன. எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள். உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்