Published : 05,Jun 2021 05:33 PM
’ஜகமே தந்திரம்’ : புது அப்டேட் கொடுத்த சந்தோஷ் நாராயணன்!

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகும் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ’ஜகமே தந்திரம்’ படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே, இப்படத்தின் ‘ரகிட ரகிட’, ‘புஜ்ஜி’, ’நேத்து’ பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் படத்தின் அனைத்துப் பாடல்களும் வரும் 7 ஆம் தேதி வெளியாகும் என்று இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டரில் அப்டேட் கொடுத்திருக்கிறார்.