Published : 31,Jul 2017 07:44 AM

விவாகரத்துக்கு மறுத்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை: கணவரின் நண்பர்களை தேடுது போலீஸ்

Cognitive-abusive-refused-divorce-search-for-her-husband-s-friends

விவாகரத்துக்கு மறுத்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை: கணவரின் நண்பர்களை தேடுது போலீஸ்

ஹரியானாவில் உள்ள சிர்சா பகுதியை சேர்ந்தவர் அந்த இளம் பெண். இவரது கணவருக்கும் இவருக்கும் கருத்துவேறுபாடு. விவாகரத்து கேட்டார் கணவர். மனைவி சம்மதிக்கவில்லை. இதையடுத்து தனது 3 நண்பர்களை அழைத்த கணவர், தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்யுமாறு கூறியுள்ளார்.

நேற்று வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம், அந்த ’நண்பர்கள்’ பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். பயந்து அலறிய அவர், வீட்டை வெளியே ஓடினார். விரட்டிச் சென்ற அவர்கள், அங்குள்ள வயலில் வைத்து துப்பாக்கி முனையில் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணை நிர்வாணமாகவே விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர்.

எப்படியோ சமாளித்து வீட்டுக்கு வந்த அந்தப் பெண், போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களையும் அந்தப் பெண்ணின் கணவனையும் போலீசார் தேடிவருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்