காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, அடுத்த 24 மணிநேரத்தில் மற்ற மாவட்டங்களிலும் இந்த பருவமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. தற்போது தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது 3 மேலடுக்கு சுழற்சி இருப்பதால் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் குமரிக்கடல், லட்சத்தீவுப் பகுதிகள், கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் 40-50கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழையால் அரபிக்கடல் பகுதியில் 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்