[X] Close

‘பட்டப்படிப்பை முடிக்கவில்லை’: மீண்டும் சர்ச்சைக்குள்ளான ஸ்மிரிதி இரானி கல்வித்தகுதி

-Do-not-graduate--again-controversial-Smriti-Irani-education

தான் இன்னும் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, மாநிலங்களவை தேர்தலுக்கான தனது வேட்பு மனுவில் கூறியுள்ளார்.

குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்பி ‌பதவிக்கு போட்டியிடும் ஸ்மிரிதி இரானி இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் தான் இன்னும் பட்டப்படிப்பை முடிக்கவில்லை எனக் கூறி இருக்கிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவில், டெல்லி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 1994 ஆம் ஆண்டு இளங்கலை வர்த்தகப் படிப்பில் பட்டம் பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள மாநிலங்களவை தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுவில் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close