
நோயாளிகளின் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை வேலூர் மாநகர தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் வழங்கினர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. நோய் தொற்று பாதிப்பாலும், ஊரடங்கு அமலில் இருப்பதால் பலரும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் நல் உள்ளம் படைத்த மக்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நோய் தொற்றால் பாதிக்கபடும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கி உள்ளனர் வேலூர் மாநகர தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர்.
50 ஐசியு படுக்கைகள், ஆக்சிஜன் ஸ்டேன்ட், படுக்கை விரிப்பு மற்றும் சில உபரகரணங்களை இதில் வழங்கியுள்ளனர். இதனை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.பார்த்தீபனிடம் வழங்கினர்.