Published : 31,Jul 2017 05:59 AM
மலர் டீச்சரை புகழும் சமந்தா!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில், மலர் டீச்சர் கேரக்டரில் நடித்தவர் சாய் பல்லவி. இவர் இப்போது தெலுங்கில் ஃபிடா என்ற படத்தில் நடித்துள்ளார். சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தில் வருண் தேஜ் ஹீரோ. கடந்த 21-ம் தேதி வெளியான இந்தப் படத்தை நடிகை சமந்தா பார்த்துவிட்டு, சாய் பல்லவியை புகழ்ந்துள்ளார்.
அவர் கூறும்போது ’ஃபிடா பார்த்தேன். படத்தில் எல்லாமுமாக நீதான் இருக்கிறாய். சாய் பல்லவி படத்தில் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அந்தப் படத்தை பார்க்கலாம். கிரேட்’ என்று புகழ்ந்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் சாய் பல்லவி. பொதுவாக நடிகைகள் ஒருவரை ஒருவர் பாராட்ட மாட்டார்கள் என்பார்கள். ஆனால், சமந்தா அதில் இருந்து வேறுபட்டவர் என்கிறார்கள்.