Published : 31,Jul 2017 05:13 AM
தமிழகத்தின் பல பகுதிகளில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சூலக்கரை, பாண்டியன் நகர், முத்தால் நகர், ரோசல்பட்டி, சத்திரரெட்டியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. தொடர்ந்து 3 நாட்களாக மாலை வேளையில் மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலைப்பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்தது.
இதேபோல் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல், கீழச்செல்வனூர், மேலச்செல்வனூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஒரு வாரமாக வெப்பம் அதிகரித்து வெயில் கொளுத்தி வந்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.