[X] Close

தமிழகத்தில் இன்று 25,317 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

25317-People-Tested-positive-for-COVID19-in-Tamil-Nadu-Today

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  25,317 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 483 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 32,263 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 2,88,702 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 


Advertisement

பாதிக்கப்பட்ட 25,317 பேரில் ஒருவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். தலைநகர் சென்னையில் 2,217 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் இந்த எண்ணிக்கை 3061-ஆக உள்ளது. ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

14,088 ஆண்களும், 11,229 பெண்களும் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close