[X] Close

சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள்: அச்சத்தில் வாழும் மக்கள் (வீடியோ)

illegal-quarries-in-vellore---public-feared

வேலூர் அருகே சட்டவிரோதமாக குவாரிகள் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறியுள்ள மக்கள், அவற்றை தடை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பெருமுகையில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளில் வெடி வைத்து தகர்க்கப்படும் பாறைகள் உடைந்து குடியிருப்புப் பகுதியில் விழுவதாகக் கூறுகின்றனர். இதனால் பாதிப்பு ஏற்படுவதாக கவலை தெரிவிக்கும் மக்கள், வெடி வைக்கப்படுவதால் வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்களில் விரிசல் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், வெடி விபத்தினால் உருவாகும் அதிர்வு காரணமாக நிலத்தடி நீருற்றும் அடைபட்டு தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close