விவசாயி உள்ளிட்ட அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடம் தத்ரூபமாக நடித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய நாகை காவல் ஆய்வாளர்.
கொரோனா 2,வது அலையில் தமிழக கிராமங்கள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக கொரோனா எனும் கொடிய நோய் ஆயிரக்கணக்கான மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்து வருகிறது. இந்த தொற்றிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக்கொள்ள மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசு அறிவுறுத்தினாலும் அதனை பொதுமக்கள் சரிவர கடைபிடிப்பதில்லை.
இதுபோன்ற அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் பெரியசாமி நாகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது காக்கி சட்டையை கழற்றிவிட்டு விவசாயி வேடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆய்வாளர் பெரியசாமி, மாஸ்க் அணியாதபோது கொரோனா நம்மை எவ்வாறு கவ்விக் கொள்கிறது என தரையில் விழுந்து தத்துரூபமாக பொதுமக்கள் மத்தியில் நடித்து காட்டினார்.
கொரோனா விழிப்புணர்வு பாடலுடன் தத்துரூபமாக, ஆய்வாளர் நடித்துக் காட்டிய போது, இறந்து போகும் காட்சி அனைவரையும் ஒருசில நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காவலர் என்றால் கடுமை காட்டுபவர் என்ற கூற்றை உடைத்தெறிந்து, மக்களின் உயிர் காக்க தன்னலம் பாராமல் சமூக அக்கறையுடன் ஆய்வாளர் பெரியசாமி நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியை கண்டு பொதுமக்கள், தாங்கள் அனைவரும் கண்டிப்புடன் ஊரடங்கை கடைபிடிப்போம் எனக் கூறி அவரை பாராட்டிச் சென்றனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!