[X] Close

அந்த 4 மணி நேரம்... ஜாலி கேலியில் கோலி டீம்!

Holiday-for-India--Nets-for-srilanka

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றது.

இதையடுத்து இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு அருகில் உள்ள ரிசாட்டுக்கு சென்றது கோலி டீம். அமரி காலே என்ற அந்த ரிசார்ட் ஒரு மாதத்துக்கு முன் தான் திறக்கப்பட்டது. காலை 11 மணிக்கு அங்கு சென்ற கோலி டீம், 3 மணி வரை அதாவது நான்கு மணி நேரம் ஜாலியாக பொழுதைக் கழித்தது. பீச் வாலிபால், நீச்சல் குள குளியல் என நேரத்தைச் செலவிட்டனர். 
’ரிசார்ட்டில் இந்திய, மேற்கிந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அதை வீரர்கள் ரசித்து சாப்பிட்டனர். இந்தியாவில் இருந்து வந்துள்ள செஃப்கள், வீரர்களுடன் செல்ஃபி எடுப்பதை விரும்பினர். போட்டிப் போட்டு எடுத்தனர். வீரர்களும் ஒத்துழைத்தனர்’ என்றார் ரிசார்ட் மானேஜர் புனித் தத்தா.

வெற்றி பெற்ற இந்திய டீம் இங்கே ஜாலி மூடில் இருக்க, தோற்ற இலங்கை டீம் தீவிர வலைப்பயிற்சியை நேற்றே தொடங்கிவிட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 3ம் தேதி கொழும்புவில் நடக்கிறது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close