Published : 30,Jul 2017 02:02 PM

அப்துல் கலாம் அண்ணன் குடும்பத்தினரிடம் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை

Enquiry-with-Abdul-Kalam-Brother-Family

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் பைபிள், குரான் வைக்கப்பட்டது தொடர்பாக கலாம் அண்ணன் குடும்பத்தினரிடம் மத்திய உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்துல் கலாம் நினைவிடத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு அருகே பகவத்கீதை வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், கலாம் அண்ணனுடைய பேரன் சலீம் இன்று காலையில் கலாம் நினைவிடத்தில் பைபிள், குரான் ஆகிய புனித நூல்களை வைத்தார். இந்த காட்சிகள் வெளியாகவே மீண்டும் சர்ச்சை கிளம்பியது. இந்து மக்கள் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனையடுத்து குரானும், பைபிளும் அகற்றப்பட்டு பேழையில் வைக்கப்பட்டன. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அவை இரண்டையும் வீணையின் அருகிலிருந்து அகற்றியதாக சலீம் தெரிவித்தார்.

இந்நிலையில், கலாமின்‌ நினைவிடத்தில் புனித நூல்கள் வைக்கப்பட்டது குறித்து கலாமின் அண்ணன் குடும்பத்தினரிடம் மத்திய உளவு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்