[X] Close

புதிதாக திருமணமானவர்கள் குழந்தைப்பேறுக்கு முன்பே தடுப்பூசியைப் பெற்றிடுங்கள் - மருத்துவர்

கொரோனா வைரஸ்,ஹெல்த்

doctor-advised-married-women-over-18-years-of-age--married-women-waiting-to-have-children-to-get-the-corona-vaccine-quickly
18 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்கள், திருமணாகி குழந்தைப்பேறுக்கு காத்திருக்கும் பெண்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் கொரோனா தடுப்பூசியை விரைந்து பெற்றிடுமாறு அரசு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார். 
image
இதுதொடர்பாக அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், '' கர்ப்பிணித் தாய்மார்களிடையே கோவிட் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. கோவிட் நோய் கர்ப்பிணித் தாய்மார்களிடையே தீவிரத்துடன் வெளிப்படுவது திண்ணமாகத் தெரிகிறது.
எனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், சமீபத்தில் திருமணம் முடிந்தவர்கள், ஒரு குழந்தை பெற்று இன்னொரு குழந்தைக்காக முயற்சி செய்பவர்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் தயவு செய்து கொரோனா தடுப்பூசியை விரைந்து பெற்றிடுங்கள்.
தடுப்பூசிக்கும் கர்ப்பமாவதற்கும் இடையே கால இடைவெளி தேவையில்லை. முதல் டோஸ் தடுப்பூசி பெற்று அதற்குப்பிறகு கர்ப்பமடைந்தவர்கள்
அச்சமின்றி இரண்டாவது டோஸ் தடுப்பூசியை நிறைவு செய்து விடுங்கள். இரண்டு டோஸ் போட்டால் தான் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். மாதவிடாய் காலத்துக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை. மாதவிடாய் காலத்தின் எந்தப்பகுதியிலும் தடுப்பூசி பெறலாம்.
தாய்ப்பாலூட்டும் அன்னைகள் உடனடியாக தடுப்பூசியைப் பெறுங்கள். உங்கள் தாய்ப்பால் வழி கோவிட் நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி உங்கள் குழந்தைக்கு கிடைத்து அதனால் உங்கள் குழந்தையும் காக்கப்படும்.  குழந்தை பிறந்தவுடனே தாய்க்கு கோவிட் தடுப்பூசி வழங்கிவிடலாம். இதனால் பால் சுரப்பில் குறைபாடு ஏற்படாது. தாய்ப்பாலை நிறுத்த வேண்டிய தேவையே இல்லை.
இன்று சாதாரண விசயமாக தெரியும் இந்த தடுப்பூசி நாளை உங்களின் உங்களது சிசுவின் உயிரைக் காக்கும் கேடயமாக விளங்கக்கூடும்'' என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement
[X] Close