Published : 30,Jul 2017 10:22 AM

திருப்பதியில் தனியாக தவித்த ஆண் குழந்தை மீட்பு

Child-rescued-in-Tirupathi

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகிலிருந்து ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

திருமலையில் டி.என்.பி சாலையிலுள்ள வணிவளாகம் அருகில் ஆதரவின்றி ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. குழந்தைக்கு அருகில் மஞ்சள் பையில், பால் பாட்டில், பிஸ்கட், 2 ஆடைகள் இருந்தன. குழந்தையை மீட்ட காவல்துறையினர், அஸ்வினி தேவஸ்தான மருத்துவமனையில் சேர்த்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.

சமீபகாலமாக திருப்பதியில் குழந்தை கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஆதரவின்றி மீட்கப்பட்டுள்ள இந்த குழந்தை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்து, குழந்தையை விட்டுச்சென்றவர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்