”செல்போன் வந்தபிறகு நமக்கு நாமே டாக்டர் ஆகிக்கொள்கிறோம். டாக்டருக்கு படிச்சவங்க மட்டும்தான் டாக்டர்” என்று கொரோனா சூழலில் விழிப்புணர்வுடன் இருப்பதோடு தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் அவசியம் குறித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார், நடிகர் சத்யராஜ். அவர், வெளியிட்டுள்ள வீடியோவில்,
“சமீபகாலமாக வேதனையான விஷயங்களைப் பார்க்கிறேன். யாருமே சரியாக தடுப்பூசி போட்டுக்கொள்வதில்லை. இதில், செல்போன் வந்தபிறகு நமக்கு நாமே டாக்டர் ஆகிக்கொள்கிறோம். அக்கம் பக்கத்திலிருந்துக்கும் நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் டாக்டர்தான். அதெப்படிங்க.. டாக்டருக்கு படிச்சவங்க மட்டும்தான் டாக்டர். ஏதாவது, குழப்பம் இருந்தால் தெரிந்த டாக்டரை அணுகுங்கள். சரியாக வழிகாட்டுவார்கள். சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு என என்னப் பிரச்சனையோ டாக்டரிடம் சொல்லுங்க.
நம்ம ஊரில் ’நம்ம பாடி.. ஸ்டீல் பாடி….. சத்தியத்துக்கு கட்டுப்பட்டது… ஒன்னும் வராது’ என்று சொல்வார்கள். இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டு இருக்க வேண்டாம். மருத்துவர்களுக்குத்தான் அனைத்தும் தெரியும். அவர்களை அணுகுங்கள். நான் சொல்வதையும் கேட்கவேண்டாம். முக்ககவசம், தனிமனித இடைவெளி எல்லோரும் செய்யும் விஷயம். ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பெரிய குழப்பம் இருக்கிறது. தயவு செய்து டாக்டர்களை அணுகி தெளிவுப்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். டாக்டர்கள் அறிவுறுத்துதல்படி. சத்யராஜ் அறிவுறுத்தல்படி அல்ல” என்று பேசியிருக்கிறார்..
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி